• Download mobile app
30 Jun 2022, ThursdayEdition - 2332
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

MDCRC-யின் சார்பில் அன்னையர் தினம், தந்தையர் தினம் மற்றும் யோகா தினம்

June 22, 2022 தண்டோரா குழு

மரபணு பரிசோதனை ஆலோசனை, ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MDCRC) கோவையில் இயங்கி வரும் லாப நோக்கில்லாத தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் டுசீன் தசைசிதைவு நோய்க்கான பரிசோதனைகள், பராமரிப்பு மற்றும் தடுப்பு வழிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.

சென்னையில் 2006 -ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மரபணு பரிசோதனை நிலையமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் மரபணு பரிசோதனை, ஆலோசனை, ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக 10 வருடங்களை கடந்து வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. MDCRC – யின் நிர்வாக இயக்குனர் Dr.B.R. Lakshmi, சென்னை ஐஐடியில் தனது முனைவர் கல்வியை (Biochemistry & Genetics) முடித்த அறிவியலாளர்.அறிவியல் சமூகத்தை சென்றடைய வேண்டும் என்ற அவினாசிலிங்கம் அய்யா அவர்களின் கூற்றை பின்பற்றி இந்நிறுவனத்தை ஆரம்பித்து டுசீன் என்ற மருந்தில்லாத மரபணு நோய்க்கு விடாமுயற்சியுடன் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

‘’ 2022 – ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள டுசீன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு இந்நோய் வராமல் தடுப்பதே MDCRC – யின் முக்கிய நோக்கமாகும்.’ ஒவ்வொரு வருடமும் MDCRC-யில் டுசீனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு அன்னையர் தினம், தந்தையர் தினம் மற்றும் யோகா தினம் போன்ற சிறப்பு தினங்கள் 2017 முதல் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த நேரடி நிகழ்ச்சிகள் இவ்வருடம் MDCRC-யில் சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படியே முப்பெரும் விழா 2022 ஆகிய தினங்கள் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. இதில் டுசீனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
இவ்விழாவை சிறப்பிக்க முனைவர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் (பேராசிரியர், தன்னம்பிக்கை பேச்சாளர்), மருத்துவர். சசித்ரா தாமோதரன் (மகப்பேறு மருத்துவர், தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்), மருத்துவர். சுப்பிரமணியன் (யோகா மற்றும் இயற்கை மருத்துவர்) ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

அன்னையர் தினம், தந்தையர் தினம் மற்றும் யோகா தினங்களை நாம் ஏன் கொண்டாடுகிறோம்? அவற்றின் முக்கியத்துவம் என்ன? நலம் பேணுதல் ஆகியவற்றை பற்றி சிறப்பாக கூறி MDCRC நிறுவனர் Dr.B.R. லக்ஷ்மி விழாவை தொடங்கினார். இயற்கை மருத்துவர். சுப்பிரமணியன் யோகா மற்றும் உடல் நலம் பற்றி அனைவருக்கும் ஏற்ற உரையினை அளித்தார்.

டுசீன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யோகா செய்தனர். நடக்க இயலாத டுசீன் குழந்தைகளும் யோகா செய்தது அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்நிகழ்வைத்தொடர்ந்து முந்தய வருடங்களின் அன்னையர் மற்றும் தந்தையர் தின நிகழ்வுகள் காணொளியின் மூலம் நினைவு கூறப்பட்டது. Dr.சசித்ரா தாமோதரன் அவர்கள் டுசீன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் தங்கள் உடல் நலம் பேணுதல் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

மேலும் MDCRC குழுவினரால் எடுக்கப்பட்ட காணொளி திரையிடப்பட்டது. இதில் “குடும்பத்தினரால் தாயுடன் சேர்த்து ஒதுக்கப்பட்ட குழந்தை எவ்வாறு சமுதாயத்தில் முன்னேற்றம் அடைகிறது” என்ற கருத்தினை MIME video மூலம் குழுவினர் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் தந்தையர்களும் தாய்மார்களும் கலந்துரையாடிய ஆதரிக்கும் மன்றம் நடைபெற்றது. இதில் டுசீன் குழந்தைகளை பேணி காக்கும் பெற்றோர் தன் மனைவி மற்றும் கணவன் எவ்வாறு குடும்பத்தை கவனிக்கிறார்? அவர்களுக்கு நன்றி கூறியும் பாராட்டியும் நெகிழ்வாக கூறி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் இத்தகைய நிகழ்ச்சிகள் குறைபாடுடைய குழந்தைகளை கவனிக்கும் பெற்றோர்களுக்கு எவ்வளவு அவசியம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வை தொடர்ந்து பேசிய Dr.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் பெற்றோர் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் சிறு தருணங்கள் பற்றியும் மிக அழகாக எடுத்துரைத்தார். நினைவு பரிசளிப்புகளும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறு நடன நிகழ்வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

மேலும் படிக்க