• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக அகற்றம்

August 17, 2016 தண்டோரா குழு

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் ஒருவாரம் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு.

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க உறுப்பினர் திருப்பூர் குணசேகரன், ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டத்தை குறைகூறியும், கிண்டலடித்தும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க உறுப்பினர்கள் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் அமளியில் ஈடுபட்டதால் சபையை தொடர்ந்து நடத்த முடியாமல் சபாநாயகர் தவித்து வந்தார்.

ஒருகட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சபை காவலர்களை அழைத்து தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கிவந்து அவைக்கு வெளியே விட்டனர்.இதையடுத்து இன்று சபையில் இருந்த தி.மு.கவின் 88 உறுப்பினர்களும் வெளியேறினர்.

பின்னர் ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வந்த தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பென்ட் தீர்மானத்தை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டு, 88 உறுப்பினர்களையும் ஒருவார காலத்திற்கு சஸ்பென்ட் செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திட்டமிட்டே வெளியேற்றப்பட்டுள்ளோம். வரும் காவல்துறை மானியத்தின் மீது நடைபெறும் விவாதத்தில் நாங்கள் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்தார்.

மேலும் எதிர்கட்சிகள் இருந்தால் தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு பதில் கூற முடியாது என நினைத்தே இது போன்ற நடவடிக்கைகளில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க