• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல்

October 13, 2016 தண்டோரா குழு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு செலவு அதிகரிக்கிறது. இச்செலவை குறைக்க எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் காற்று மாசுபாடு குறைந்து சுற்றுசுழல் பாதுகாக்கபடும் என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் ஜம்முகாஷ்மீரில் கல்வி தரத்தை மேம்படுத்த அங்கு ஐஐஎம் கல்வி நிறுவனம் தொடங்கவும் இதற்காக இந்தியா ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குளிர்கால கூட்டத்தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது . மத்திய அரசாங்கம் பட்ஜெட் கூட்டத்தொடரை முன் கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளதால், குளிர்கால கூட்டத் தொடரும் வழக்கத்துக்கு மாறாக நவம்பர் இரண்டாம் வாரத்திலேயே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க