January 10, 2018
தண்டோரா குழு
சுவிட்சர்லாந்து நாட்டில் ஆப்பிள் ஐபோனை பழுதுபார்க்கும்போது திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் ஐபோன் கடை ஒன்றில் பழுதுபார்க வந்த ஆப்பிள் நிறுவன ஐபோன் ஒன்றின் பேட்டரி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
தவறான ஐபோன் பேட்டரியால் தான் இந்த விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் பழுது பார்த்தவரின் கை ஏறக்குறைய முழுவதுமாகவே எரிந்துவிட்டது.இதனையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும்,இச்சம்பவம் தொடர்பாக சூரிச் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.