May 10, 2018
தண்டோரா குழு
மலேசியாவில் உலகின் மிகவும் வயதான பிரதமராக மஹாதீர் மொஹமத்(92) பொறுப்பேற்கிறார்.
மலேசியாவில் 14வது பொது தேர்தலில் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் பிரதமர் நஜீப் ரஸாக் ஆளும் பிஎன் கட்சிக்கும்,முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இதில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.இதனால் 92 வயதான மகாதிர் முகமது மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ளார்.இதையடுத்து உலகில் மிகவும் வயதாக பிரதமர் என்ற பெருமையை மகாதிர் முகமது பெற்றுள்ளார்.
மேலும்,மலேசியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.