August 3, 2018
தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“ஊழலற்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம்.அதனால் நிறைய பேர் கூட்டணிக்கு கிடைக்க மாட்டார்கள்.ஊழலற்ற கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளனர்.உள்நோக்கத்துடன் தான் சிலைக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.ஊழல் இல்லாத துறை எது?ஊழல் குறித்து பலர் பட்டியலிட்டுள்ளனர்,இனி எந்தத் துறையில் ஊழல் இல்லை என்பதையே பட்டியலிட வேண்டும்.தமிழக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை.லோக் ஆயுக்தாவை நீர்த்துப்போக செய்ததன் மூலம் வெளிப்படை தன்மையில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள்.நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் எனக் கூறினார்.மேலும், திட்டமிட்டபடி விஸ்வரூபம் – 2 திரைப்படம் வெளியாகும்” எனவும் கூறியுள்ளார்.