August 29, 2018
தண்டோரா குழு
நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தாயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அப்படத்தில் நடித்த அர்ஜுன்,சமந்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில்,விழாவில் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை நடிகர் விஷால் தொடங்கினார்.அப்போது,இயக்கத்தின் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.அதில்,விஷால் புகைப்படத்துடன் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மற்றும் அன்னை தெரஷா புகைப்படம் உள்ளது.மேலும்,விவேகம்,வித்தியாசம்,விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம்,அன்பை விதைப்போம் என்ற வாசகம் உள்ளது.
அப்போது பேசிய நடிகர் விஷால்,
“மக்கள் நல இயக்கம்” அரசியலை நோக்கி செல்லும் இயக்கமல்ல.மக்கள் பணி செய்யவே இந்த புதிய அமைப்பு.நிஜ வாழ்ககையில் நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே.நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா,அப்துல்கலாம்.
மக்கள் பிரச்சனையினை நேரில் சந்திது தீர்த்து வைப்பதே அரசியல் ஆகும்.ரசிகர்கள் மற்றும் தன்னம்பிக்கையே எனது சொத்து.எனக்கு கார் மட்டுமே சொந்தமாக உள்ளது,சொந்தவீடு கூடயில்லை.எனக்கு சொத்து என சொல்லிக்கொள்ள இருப்பது எனது ரசிகர்கள் மட்டுமே.நல்ல ரசிகர்களை பார்க்கும் போது என் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.வீதியில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்தும் கேட்காமல் விட்டுவிடுபவர் பிணத்திற்கு சமம் என்றார்.
மேலும்,திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது.அது நம்ம ஊர் மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அமைப்பை தொடங்கி அந்த இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில்,விஷால் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.