• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் தனிப்பட்ட கருத்து அல்ல அடிமட்டத் தொண்டர்களின் கருத்து மைத்ரேயன்

November 22, 2017 தண்டோரா குழு

முகநூலில் நான் தெரிவித்த கருத்து தனிப்பட்ட கருத்து அல்ல அடிமட்டத் தொண்டர்களின் கருத்து என மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பி மைத்ரேயன், நேற்று பேஸ்புக் பக்கத்தில், இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்து இன்றுடன் 3 மாதம் முடிந்து, 4வது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்? என்று கேள்வி எழுப்பி தனது விரக்தியை காட்டினார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மைத்ரேயனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என தம்பிதுரை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனிப்பட்ட கருத்து எனக்கூறிய தம்பிதுரைக்கு மைத்ரேயன் முகநூலில் பதில் அளித்துள்ளார். அதில் அதிமுகவில் மனங்கள் இணையவில்லை என நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல; அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன் என மைத்ரேயன் கூறியுள்ளார்.

மேலும், அதிமுக இரு அணிகள் குறித்து தாம் கூறிய கருத்தில் மாற்றம் இல்லை என்று மைத்ரேயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால் இரு அணியினரின் மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க