• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய மல்லையா உள்பட பெரிய தொழிலதிபர்களின் ரூ. 7 ஆயிரம் கோடி கடன் வாராக் கடனாகிறது

November 16, 2016 பா.கிருஷ்ணன்

நாட்டில் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத பல தொழிலதிபர்களின் மொத்த கடன் ரூ. 7,016 கோடியை வாராக் கடனாக அறிவிக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

இதில் கிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவின் கடன் தொகையான ரூ. 1,201 கோடியும் வாராக்கடனாக அறிவிக்கப்படுகிறது. டி.என். ஏ. என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

கடன் நிலுவை வைத்திருந்தவர்களில் 63 பேரின் கடன் முழுமையாகவும் 31 பேரின் கடனில் ஒரு பகுதியும் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும் அச்செய்தி கூறுகிறது.
மீதமுள்ள 7 பேரின் நிலுவை “வாராக்கடன்” என்ற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

மொத்த கடனான ரூ. 7,016 கோடி தொகை குறைவாக வசூலிக்கப்பட்ட கடன் கணக்கு (Advance Under Collection Account) என்ற தலைப்பின் கீழ் இணைத்து, கணக்கு இருப்பு நிலைக் குறிப்பேட்டில் (balance sheets) பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏராளமான கோடி கடன் வைத்திருந்த விஜய் மல்லையாவைத் தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்திருந்தது. விஜய் மல்லையா 17 வங்கிகளில் கடன் வாங்கி மொத்தம் ரூ. 6,963 கோடி கடன் நிலுவை வைத்திருக்கிறார். அவர் தலைமறைவாகி, வெளிநாட்டில் தங்கியுள்ளார்.

கொடுத்த கடனைத் திருப்பி வசூலிக்காத அரசு வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் இருக்கிறதுகடன்தள்ளுபடியைக் கடுமையாகச் சாடிய உச்ச நீதிமன்றம் கோடிக் கணக்கில் கடன் பெற்றுத் திருப்பித் தராதவர்களின் பட்டியலை வெளியிடும்படி உத்தரவிட்டிருந்தது.

கடந்த வியாழனன்று கூடிய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், அரசு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியலை அரசு வெளியிடும்படி வலியுறுத்தியது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தற்போது, யார்யார் அவ்வாறு கடன் தள்ளுபடி பெற்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க