• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் பேச எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை – தினகரன் எம்.எல்.ஏ

January 10, 2018 தண்டோரா குழு

சட்டபேரவையில் என் மீதான விமர்சனத்துக்கு பதில் அளிக்கவிடாமல் தடுக்கின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

2018ம் ஆண்டிற்கான தமிழக முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்களன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இருந்து வெளியேறி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக அரசை எதிர்த்து ஓட்டுபோட்ட ஓ.பி.எஸ் முன்பு இருந்ததும் தற்போது எப்படி உள்ளார் என்பதும் மக்களுக்கு தெரியும்.

முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் சிறந்த நடிகர்கள். என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான். சில அமைச்சர்களின் சதியால் தான் நான் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன். குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னம் பெற்றும், ஆர்.கே.நகரில் தோல்வியடைந்துள்ளனர் என்றார்.

மேலும், மதுசூதனன் வேட்பாளராக இருந்ததாலேயே ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. தான் பிறந்த ஊருக்கு கூட செல்ல முடியாத நிலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார். உள்ளாட்சி துறை, சுகாதார துறையின் அலட்சியமே டெங்கு பரவலுக்கு காரணம். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சரியாக எடுக்கவில்லை என டிடிவி குற்றம்சாட்டிய அவர் எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காகவே ஊதிய உயர்வு அளிக்கிறது அதிமுக அரசு. ஜனவரி 12-ம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க