• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஓடு பாதையை விட்டு விலகி ஓடிய விமானம்

September 19, 2016 தண்டோரா குழு

ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஓடு பாதையை விட்டு விமானம் விலகி ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக அதில் பயணம் செய்த 72 பயணிகளும் மற்றும் 15 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஐதராபாத்திலிருந்து இருந்து நேற்று இரவு 7 மணிக்கு தனியார் விமானமான ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு புறப்பட்டது. அதில் 72 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்கள் இருந்தனர். இரவு சுமார் 7.45 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில், அந்த விமானம் தரை இறங்கியது.

விமானம் தரையிறங்கிய நேரம் அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையில் தரை இறங்கிய விமானம், ஓடு பாதையில் வேகமாக சென்றது. திடீரென ஓடுபாதையை விட்டு விலகி சென்று ஓடியது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள்.

அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று சேறும் சகதியுமாக இருந்த மண் தரையில் சிக்கி விமானம் நின்றது. இதையடுத்து பயணிகளும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். ஒரு வேளை, அந்த விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.விமான பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் அதிர்ஷ்டவசமாக 72 பயணிகள் உயிர் தப்பினர். விமானத்தில் இருந்த பயணிகளை, ரேணிகுண்டா தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பாக கீழே இறக்கினார்கள்.

அந்த விமானத்தில் ஆந்திர முன்னாள் அமைச்சர் ராம்நாராயணன் ரெட்டி பயணித்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்காமல் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரையிறங்கும் போதே ஏதோ பிரச்சனை என்று உணர்ந்ததாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.

மேலும், இதுக்குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலையத்தின் அதிகாரிகள் யாரும் இச்சம்பவத்தை குறித்து கருத்து தர முன்வரவில்லை.

மேலும் படிக்க