• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து- 9 பேர் பலி, 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்

July 24, 2016 தண்டோரா குழு

கிருஷ்ணகிரி – ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே சின்னாறு என்ற பகுதியில் முன் சென்ற கன்டெய்னர் லாரி மீது தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமுற்றவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி,சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர், கதிரவன், வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ., முருகன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது ஓட்டுநர் கவனக்குறைவால் விபத்த ஏற்பட்டது. இனிமேல், இதுபோன்று விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறினார்.

மேலும் படிக்க