• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து – முதலமைச்சர் பழனிசாமி

September 1, 2018 தண்டோரா குழு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு,கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்ற கிருஷ்ணர் பிறந்த இத்திருநாளில்,மக்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய்,தயிர், பழங்கள்,இனிப்புகள்,பலகாரங்களை படைத்து,குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை வீட்டின் வழிநெடுக பதித்து,பகவான் கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வந்தருளியதாக பாவித்து,கிருஷ்ண பகவானை போற்றி வணங்கி,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில்,பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும்,பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, கடமை உணர்வுடனும்,மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி,அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்”.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

மேலும் படிக்க