• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவில்பட்டி வாலிபர் கொலையில் தேடப்பட்டவர் கோர்ட்டில் சரண்

October 13, 2016 தண்டோரா குழு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் பயணம் செய்த வாலிபரை மர்ம நபர்கள் துப்பாகியால் சுட்டுக்கொலை செய்யபட்ட சம்பவம் தொடர்பாக மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்தார்.

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் சாத்தூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.காலை 11 மணியளவில் கோவில்பட்டி அருகே உள்ள தாயில்பட்டி விலக்கு ரோடு பகுதியில் பஸ் சென்ற போது, கருப்பசாமியின் பின்புறம் அமர்ந்து இருந்த மர்மநபர்கள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இதில், ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி அங்கேயே உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 டிஎஸ்பிக்கள், மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கபட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கோவில்பட்டியை சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் அப்துல்லா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பசாமியின் சகோதரர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

எனவே இக்கொலைக்கு பழிக்குப்பழியாக கருப்பசாமியை சுட்டு கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.மேலும் இதுதொடர்பாக தலைமறைவாகி இருந்த அப்துல்லாவின் தந்தை முகமது ரபீக் இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இந்த கொலை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க