• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து போலீசார் நடத்திய புதுமையான குழந்தைகள் தினம்

November 15, 2016 தண்டோரா குழு

கோவையில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக குழந்தைகள் தினம் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

போக்குவரத்து விதிகளைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் வகையில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சரவணன் திட்டமிட்டார்.

அவரது ஆலோசனை பேரில் கோவை ஆர்.எஸ். புரம், ஒப்பனைக்கார வீதி, பீளமேடு, ராம்நகர் மற்றும் புலியங்குளம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

இந்நிகழ்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர். சாலை விதிகள், தலைக்கவசம் அணிந்து செல்வதன் அவசியம், விளையாட்டின் முக்கியத்துவம் போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகளும் நடைபெற்றன.

குழந்தைகளை எவ்வாறு வழிநடத்திச் செல்ல வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுரையும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் குழந்தைகளுடன் நிகழ்ச்சியைப் பயனுள்ள வகையில் இவ்வாறு கொண்டாடியதன் விளைவாக அக்குழந்தைகள் வரும்காலங்களில் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க