• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘கோவை விழா’ கொண்டாட்டம், இன்று முதல் ஆரம்பம்!

January 5, 2018 தண்டோரா குழு

கோவை மக்களின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் பத்தாவது, ‘கோவை விழா’ கொண்டாட்டம், இன்று(ஜன 5) முதல் கோலாகலமாக துவங்குகிறது.

கோவை விழா நாளொரு கொண்டாட்டமாய் தொடர்ந்து, எட்டு நாள் நடக்கும் இந்த திருவிழாவில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என, பல்வேறு அமைப்புகள் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கோவை விழாவில் முதல் முறையாக “டபுள் டக்கர் பஸ்” அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான துவக்க விழா வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்துக் கொண்டு டபுள் டக்கர் பஸ்ஸை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பஸ்ஸில் இன்று முதல் தொடங்கி வரும் 12ம் தேதி வரை கோவையின் முக்கிய பகுதிகளை சுற்றி பார்க்கலாம்.மேலும் இலவசமாக முன் பதிவின் அடிப்படையில் டோக்கன் பெற்று ஒரு மணி நேரம் இந்த பஸ்ஸில் பயணம் செய்யலாம்.

கோவை விழாவின் ஒரு பகுதியாக,கோவையின் பாரம்பரிய உணவு வகைகளின், சிறப்பை உணர்த்தும் வகையில் பல்வேறு உணவுதிருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘டேஸ்ட் ஆப் கோவை’ என்ற பெயரில், மாபெரும் உணவுத்திருவிழா வ.உ.சி., மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க