• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு சுரங்கத்தில் வேலை வடகொரிய அரசு அதிரடி

August 26, 2016 தண்டோரா குழு

வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் பதக்கப்பட்டியல் கனவை பொய்யாக்கியதற்கு தண்டனையாக, ஒலிம்பிக்கில் பங்கேற்ற வடகொரிய வீரர்களை நிலக்கரி சுரங்கத்தில் பணியமர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

2016ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி ரியோவில் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதையெடுத்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உம் ஒலிம்பிக்கில் போட்டிக்கு வீரர்கள் கிளம்புவதற்கு முன் அவர்களை சந்தித்தார். அப்போது இம்முறை 5 தங்கம் உட்பட 17 பதக்கம் வெல்ல வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய சார்பில் 31 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பளுத்தூக்குதல், நீச்சல் உள்ளிட்ட 9 போட்டிகளில் கலந்து கொண்ட அவர்கள், 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களையே வென்றனர்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த வடகொரிய அரசு அதிபர் கிம் ஜாங்கின் பதக்கப்பட்டியல் கனவை பொய்யாக்கியதற்கு தண்டனையாக, ஒலிம்பிக்கில் பங்கேற்ற வடகொரிய வீரர்களை நிலக்கரி சுரங்கத்தில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் விளையாட்டுத்துறை உயரதிகாரி ஒருவர், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும், ஆனால், எந்த பதக்கத்தையும் பெறாமல் நாடு திரும்பும் வீரர்களுக்கு அதிபர் நினைத்தால் தண்டனையாக அவர்களுக்கு ரேஷன் குறைக்கப்படும் என்றும் சுரங்கத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுப்பப்படுபவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார். பல நாடுகளில் எந்த பதக்கங்களை பெறாமல் நாடு திரும்பியவர்கள் அரசு சலுகைகளையும், உதவிகளையும் பெற்று வரும் நிலையில் வடகொரிய அரசின் இந்த நடவடிக்கைகள் பலரையும் ஆச்சர்யத்திலும் வடகொரிய வீரர்களுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க