October 24, 2018 
தண்டோரா குழு
                                கூத்துப்பட்டறையின் தந்தை முத்துசாமியின் மறைவிற்கு நடிகர் விஜய்சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி.இந்நாடகப்பள்ளி நாடக ஆசிரியர் ந.முத்துச்சாமியால் 1997ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.இக்கூத்து பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர்.அவர்களில் விஜய் சேதுபதி, பசுபதி,விமல்,குரு சோமசுந்தரம்,கலைராணி,இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். 
இந்நிலையில்,சென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தை சேர்ந்த ந.முத்துசாமி பத்மஸ்ரீ விருதை பெற்றவராவார்.அவரது மறைவிற்கு நடிகர் விஜய்சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.