October 12, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பருவமழை இந்த ஆண்டு சரிவர பெய்து வரும் நிலையில் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும்,நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பணைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியிறுத்தப்பட்டது.இதேபோல் நிலுவையில் உள்ள ஆனைமலை நல்லாறு,பாண்டியாறு பொன்னம்புழா உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து 500 க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர்.