• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவியின் பேஸ்புக் பக்கத்தை பேனராக வைத்த தொண்டர்கள் !!

October 18, 2016 தண்டோரா குழு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீயை பேஸ்புக்கில் விமர்சித்த மாணவியின் பேஸ்புக் பக்கத்தை பேனராக அக்கட்சி தொண்டர்கள் வைத்ததால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பொறியியல் கல்லூரி மாணவிராஜஸ்ரீ சட்டோபாத்யாய் (21).இவர் தசரா பண்டிகையின் போது கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்பட்ட,துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் குறித்து, தனது பேஸ்புக்கில் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிலை கரைப்பு உங்களோடு முற்றுபெறட்டும்! டியர் மேடம்’ பெங்காளியில் பகிர்ந்துள்ளார்.

இதனால் கோபமடைந்தஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இரண்டு நாட்கள் கழித்து அவர் வீடு முன்பு கும்பலாக திரண்டு வந்து மாணவியிடம் பொது மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.ஆனால் ராஜஸ்ரீ அதற்கு மறுத்து விட்டார்.

இதையெடுத்து, மேலும் கோபமடைந்த அவர்கள் அதே நாளில்,ராஜஸ்ரீயின் வீட்டின் வெளியே, ஐந்தரை அடி உயரமுள்ள விளம்பர பலகை ஒன்றை வைத்து அதில் ராஜஸ்ரீயின் பேஸ்புக் பக்கதுடன் ‘வெட்கம்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் வீட்டார்ராஜஸ்ரீயின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களுக்குளை நிதிப்பற்றாக்குறை காரணமாக பஞ்சப்படி உள்ளிட்டபணப்பலனகள் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வளவு பொருட்செலவில் இத்தகைய ஊர்வலங்கள் நடத்தப்படுவது விந்தையாக உள்ளது என்றும் இது பொதுமக்கள் பணம். நான் தனிப்பட்ட முறையில் எதற்கும் எதிரியில்லை என்றும் ராஜஸ்ரீ பத்திரிக்கை ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும், இம்மாநிலத்தின் முடிமகளாக இருக்கும் எனக்கு இத்தகைய விஷயங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரம் எனக்கு உண்டு.இதுதான் மேற்குவங்கத்தில் ஜனநாயகமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதைபோல் இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அவரது அண்டைவீட்டார்கள் என்பதால் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

எனினும், தற்பொழுதுஅந்த விளம்பரப்பலகை நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இச்சம்பவதிற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க