• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கெத்தையில் நீரிடி ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் 29-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

October 26, 2018 தண்டோரா குழு

கெத்தையில் நீரிடி ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மின்வாரிய ஊழியர்கள்,பொதுமக்கள்,பல்வேறு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மஞ்சூர் தாலுகா கெத்தையில் குந்தா நீர்மின் நிலையம் இயங்கி வருகிறது.இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்குவதற்காக அணையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் 80-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர் குடியிருப்புகள் இருந்தது.நீர்மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.

கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கெத்தையில் மாலை 6 மணிக்கு வடகிழக்கு பருவமழையின் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர்.அப்போது அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.மலைகளில் இருந்து ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து மின்வாரிய குடியிருப்புகளை இடித்து தள்ளியது.கண்ணிமைக்கும் நேரத்தில் 40 குடியிருப்புகள் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது.இந்த கோர சம்பவத்தில் கெத்தை தபால் நிலைய அதிகாரி சந்திரன் உள்பட மொத்தம் 36 பேர் மண்ணுக்குள் புதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அப்போது,குடியிருப்பில் இருந்த ஒரு பெற்றோர் தனது 4 மாத குழந்தை சாபனா மற்றும் ஜாபர் அலியை(2) வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசினர்.இதனால் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.கெத்தை பகுதியில் நீரிடி சம்பவத்தில் காணாமல் போனவர்கள் இறந்ததாக கணக்கெடுக்கப்பட்டது.அந்த சம்பவத்தில் மொத்தம் 54 பேர் இறந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.பின்னர் இறந்தவர்களுக்கு நினைவுத்தூண் கட்டப்பட்டது.

இந்நிலையில்,இந்த சோக சம்பவம் நடைபெற்று நேற்றுடன் (அக் 25)29-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அப்போது,கெத்தையில் நீரிடி ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மின்வாரிய ஊழியர்கள்,பொதுமக்கள்,பல்வேறு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கிடையில்,நடப்பாண்டில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி,குன்னூர்,கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும்,மாவட்டம் முழுவதும் 233 இடங்கள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் கொண்ட 35 மண்டல குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதேபோல் மாவட்ட காவல்துறை சார்பில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க