கேரளா முழுவதும் இன்று (நவ.,17) திடீர் முழு அடைப்பு போராட்டத்திற்கு சபரிமலை கர்மா சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.இதற்கிடையில்,ஐக்கிய வேதி அமைப்பின் மாநில தலைவி சசிகலா(56) நேற்று (நவ.,16) இரவு சபரிமலைக்கு அய்யப்பனை தரிசனம் செய்ய சென்றார்.
ஆனால்,இரவில் செல்ல வேண்டாம் என போலீசார் அவரை மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.இதனால் சசிகலா அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து,சசிகலாவை கைது செய்த போலீசார்,அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்நிலையில்,சசிகலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்து ஐக்கிய வேதி,பா.ஜ.,மற்றும் இந்து அமைப்புக்கள் சார்பில் இன்று திடீர் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கன்னியாகுமரியிலிருந்து செல்லும் பேருந்து களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்!