• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

96 வயதில் 98 மதிப்பெண் எடுத்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய கேரளா கல்வித்துறை அமைச்சர்!

November 8, 2018 தண்டோரா குழு

96 வயதில் 98 மதிப்பெண் எடுத்த மூதாட்டிக்கு கேரளா கல்வித்துறை சார்பில் லேப்டாப் பாரிசாக வழங்கப்பட்டது.

கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய மூதாட்டி 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

கேரளா மாநிலத்தில் பல இடங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வு நடைபெற்றது.இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல்,கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்வு எழுதியவர்களில் கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாள்(96) தான் மிக வயதான மாணவி.இத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் புதன் கிழமை வெளியிடப்பட்டன.அக்‌ஷரலக்‌ஷம் எழுத்துதேர்வில் கார்த்தியாயினி அம்மாள் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று அதிர்ச்சியை தந்துள்ளார்.இந்த பாட்டி எழுத்தில் 40க்கு 38 மதிப்பெண்களையும்,மற்ற தேர்வுகளில் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஆலப்புழாவில் உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றிருந்த கேரளா கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் கார்த்தியாயினி அம்மாவின் வீட்டிற்கு சென்று மடிக்கணினியை பரிசாக வழங்கினார்.

இந்த பரிசை சற்றும் எதிர்பாரத கார்த்தியாயினி அம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.மேலும் கார்த்தியாயினி அம்மா தனக்கு வழங்கப்பட்ட லேப்டாப்பில் அவரது பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்து காட்டி அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க