• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா வெள்ள நிவாரண நிதியாக தெலங்கானா அரசு ரூ.25 கோடி வழங்கியது!

August 18, 2018 தண்டோரா குழு

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தெலுங்கான அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி வழங்கி தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.அந்த வகையில் கேரளா வெள்ள நிவாரண நிதியாக தெலங்கானா அரசு ரூ.25 கோடி வழங்குவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.மேலும்,கேரள மாநிலத்துக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி,கர்நாடக 10கோடி,பஞ்சாப் 10 கோடி,தமிழ்நாடு 10 கோடி,ஆந்திரா 5 கோடி,ஒரிசா 5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

மேலும் படிக்க