August 14, 2018
தண்டோரா குழு
கனமழை காரணமாக பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு 2 நாட்கள் பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சபரிமலை தேவசம்போர்டு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சபரிமலையில் நாளை(ஆக.,14)நிறைபுத்தரிசி பூஜைக்காக நடை திறக்கப்படவுள்ளது.இந்நிலையில் கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பம்பா நதியை கடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.இதனால் பக்தர்கள் யாரும் சபரிமலை வர வேண்டாம் என்றும்,மீறி சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் எரிமேலி, பத்தினிம்திட்டா,நிலக்கல்,பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.