August 25, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்த கனமழையால் இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.இந்த வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிததன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் கடும் துயரத்தை எதிர்கொண்டுள்ள கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வலிமை சேர்க்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தது பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
“கேரள மக்கள் கடந்த சில நாள்களாக அனுபவித்து வந்த கஷ்டங்களிலிருந்து வெளியேவர இந்த ஓணம் பண்டிகை உங்களுக்கு அதிக வலிமை தரும்.மொத்த இந்தியாவும் உங்களுக்குத் தோள் கொடுக்கும்,பிரார்த்தனை செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.