August 14, 2018
தண்டோரா குழு
கனமழையால் கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது.நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர்.50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனிடையே கனமழை பாதிப்பையடுத்து இந்த ஆண்டு ஓணம் கொண்ட்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்,
“கனமழை,வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை கேரளா சந்தித்து வருகிறது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.வீடு,உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் ஓணம் பண்டிகையை அரசு சார்பில் வழக்கம் போல் கொண்டாடுவது சரியாக இருக்காது.எனவே இந்த ஆண்டு அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.