August 13, 2018
தண்டோரா குழு
கேரள வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.கனமழை காரணமாக இதுவரை 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.
பாலக்காடு,மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர்.50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள அரசுக்கு பலர் இதுவரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,முதல்வர் நிவாரண நிதிக்காக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் சேர்ந்து 25 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.