• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மக்களுக்கு அரசு மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உதவுவோம் – உம்மன் சாண்டி

August 11, 2018 தண்டோரா குழு

கேரள மாநில மக்கள் மழையால் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உதவுவோம் எனவும் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகியை நலம் விசாரிப்பதற்காக கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று(ஆகஸ்ட் 11)வருகை தந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவரான கருணாநிதி,கேரள மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார் எனவும்,அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கேரள மக்கள் மழையால் சொல்லொனா துயரத்திற்கும் பயத்திலும் ஆழ்ந்துள்ள நிலையில்,அரசியல் வித்தியாசங்கள் குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும்,மத்திய அரசின் உதவியில்லாமல் மீட்பு பணிகளை செய்துவிட முடியாது எனவும்,மத்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்பு பணிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,மீட்பு பணிகளுக்கு பிறகு புணரமைப்பிற்காக தேவைப்படும் நிதி குறித்து மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கும் எனவும் அதனை வழங்க அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்தும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேரள அரசிற்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க