• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும்-சுதர்சன் பகத்

August 27, 2018 தண்டோரா குழு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும் என மத்திய பழங்குடியின நலத்துறையின் இணையமைச்சர் திரு.சுதர்சன் பகத் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மக்களின் பண்பாட்டு பதிவுகள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது. உதகையிலுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மத்திய பழங்குடியின நலத்துறையின் இணையமைச்சர் திரு.சுதர்சன் பகத் தொடங்கி வைத்தார்.இதையொட்டி இடம் பெற்றிருந்த புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 36 பண்டைய பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.இந்த கருத்தரங்கில் வானதி சீனிவாசன்,புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் பக்தவத்சல பாரதி, தமிழக பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் M. சுப்ரமணியம் உட்பட பலர் உரையாற்றினர்.

பின்னர்செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர்,

“கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றம் மற்றும் வெள்ளம் எதிர்பாராத ஒன்று.பிரதமர் மோடி கேரளா மாநில வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளை அளிக்கும்.கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும் என்றும்,கேரளா மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து வர பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளை மேற்கொள்வார் என்றார்”.

மேலும் படிக்க