August 13, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில்,கேரளாவில் உள்ள வயநாடு,இடுக்கி,ஆழப்புலா கோட்டயம்,எர்ணாகுளம்,பாலக்காடு,மலப்புரம்,கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அரைநூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால்,கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும்,மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள அரசுக்கு பலர் இதுவரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் திரு.ராஜ்குமார் சேதுபதி திருமதி.ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் 10 லட்சம் ரூபாய் பணத்தை நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர்.