• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மக்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 1கோடி ரூபாய் நிதியுதவி

August 23, 2018 தண்டோரா குழு

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மக்களை மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையால் பாதித்த கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிவாரண நிதியை வரும் 25ம் தேதி கேரளா முதல்வரை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்குகிறார்.

மேலும் படிக்க