• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு

May 8, 2018 தண்டோரா குழு

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிய கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக மாணவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவிற்கு தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்றனர்.இதனையடுத்து தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் சிரமத்தை சந்தித்துவிட கூடாது என உரிய ஏற்பாடுகளை செய்ய காவல்துறை அதிகாரிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,மாணவர்களுக்கு உதவும் வகையில் கேரளா அரசு சார்பில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் உதவி மையங்களை அமைத்து உரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது, நீட் தேர்வு சிறப்பாக எழுதிய தமிழக மாணவர்கள் கேரள அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நன்றி தெரிவித்துக் வருகின்றனர்.மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாகவும்,சமூக வளைதளங்களிலும் கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க