• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் கனமழையால் கோவையில் காய்கறிகள் தேக்கம்

August 13, 2018 தண்டோரா குழு

கேரளா மாநிலத்தில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கோவையில் உள்ள மொத்த விற்பனை மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அனுப்ப முடியாமல் மூட்டை,மூட்டையாக தேங்கி நிற்கிறது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 750 டன் காய்கறிகள் சென்று வரும் நிலையில்,அங்கு நிலவும் கனமழை வெள்ளத்தால் போக்குவரத்து மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு தினசரி 400 டன் வீதம்,ஆறு கோடி ரூபாய் அளவிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது.

கோவையில் உள்ள எம்.ஜி.ஆர் காய்கறி மொத்த மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில்,இருந்து வழக்கமாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள் தற்போது கொண்டு செல்ல முடியாமல் தேங்கி உள்ளதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இரண்டு நாட்களுக்கு கேரளாவில் பாதிப்பு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் காய்கறிகள் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அழுகும் தன்மையுள்ள தக்காளி,வெங்காயம் ஆகியவை அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் கோவையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

மேலும் படிக்க