• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி நிதியுதவி

August 11, 2018 தண்டோரா குழு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தென் மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில்,கேரளாவில் உள்ள வயநாடு, இடுக்கி, ஆழப்புலா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரைநூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால்,கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர்கள் சூர்யா,கார்த்தி இருவரும் சேர்ந்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க