January 19, 2018
தண்டோரா குழு
ஸ்ரீநகரில் புத்தக கடை ஒன்று இந்த ஆண்டிற்கான லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நேரு பூங்கா ஏரிக்கரையில் “Gulshan Books”
என்ற புத்தக கடை அமைந்துள்ளது.இந்த புத்தககடை ஷேக் முகமது உஸ்மான் மற்றும் சன்ஸுக்கு சொந்தமானது.இந்தகடையில் சுமார் 80,000 புத்தகங்கள் உள்ளது.
இந்த புத்தக கடையில் புத்தகங்களை வாசிக்க ஒரு அறையும்,சிற்றுண்டி கடையும் அமைந்துள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தேயிலை அல்லது காபி கோப்பையுடன் அமர்ந்து, தாங்கள் விரும்பிய புத்தகங்களை எவ்வளவு மணிநேரம் வேண்டுமானாலும் படிக்க அனுமதி உண்டு.
மேலும்,இந்த புத்தக கடையில் காஷ்மீர் நகரை குறித்து எழுதப்பட்ட நூல்கள், உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதிய புத்தங்கள் உள்ளன.காஷ்மீரின் கலாச்சாரத்தை பாதுகாத்து வருவதோடு, அறிமுக எழுத்தாளர்களை ஊக்கம் அளிக்கிறது. அவர்களுடைய எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் மேடையாகவும் அந்த கடை விளங்குகிறது.இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த புத்தக கடை
லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.