• Download mobile app
11 Aug 2026, TuesdayEdition - 3835
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

September 20, 2018 தண்டோரா குழு

முதல்வர்,காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் கருணாஸ்.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக குறித்து ஆளும் கட்சி குறித்தும் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகிறார்.இதற்கிடையில்,கடந்த 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் தமிழக முதல்வர் குறித்தும் காவல் துறை அதிகாரி மற்றும் சாதி குறித்தும் பேசியுள்ளார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து அதற்கு விளக்கமளித்த கருணாஸ்,”யாருடைய மனதும் புண்படும் வகையில் பேசியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.தேவையின்றி வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் பேசினேன்.மற்றபடி காவல்துறையை மதிப்பவன் நான்.நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் கிடையாது”என்று கருணாஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், யூடியூபில் வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் முதல்வர்,காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க