• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்

October 13, 2016 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்துக்கு தினமும் காவிரியிலிருந்து சுமார் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கர்நாடக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வந்தது.

இது தொடர்பாக தமிழகத்தில் கர்நாடகாவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சில நாட்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் இன்று கர்நாடக அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலவில்லை என்றும், தமிழகத்துக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடும்படி பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் அம்மாநில குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருப்பதாகக் கூறி, அம்மாநில அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கத்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள நீர் நிலைகள் அணைகள் குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட தொழில்நுட்ப குழு அண்மையில் அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வினை முடித்துவிட்டது வரும் 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க