July 30, 2016
தண்டோரா குழு
கலசா பன்டுரி மஹா தாயி நதி நீர் பங்கீட்டுப்பிரச்சனை எதிரொலியாகக் கர்நாடக மாநிலம் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக கர்நாடகாவுக்கு செல்லக்குடிய 270 தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெங்களுருக்கு செல்லப் பேருந்துகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டது. ஜூஜூவாடி எல்லையை தாண்டிச் செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக காவல்துறை அனுமதி தந்துள்ளது. மகதாயி நதிநீர் பங்கீடு விவாகத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.