May 15, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் 222 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் கடந்த மே 12ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் வாக்கு என்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதற்கிடையில் பெரும் செல்வாக்குடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவை சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜிடி தேவகவுடா. சித்தராமையாவை விட தேவகவுடா 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்று முன்னிலையில் உள்ளார்.இந்த வெற்றியை தேவகவுடா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் பதாமி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவுக்கு பின்னடைவு சந்தித்து வருகிறார்.எனினும், முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கடந்த தேர்தலில் சித்தராமையா வெற்றிபெற்ற தொகுதியான வருணாவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.தற்போது வரை தனிப் பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாஜக முன்னிலை பெற்று வருகிறது.