• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடாகவில் புதிதாக பொறுப்பேற்கும் அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டும் – ஸ்டாலின்

May 15, 2018 தண்டோரா குழு

புதிதாக பொறுப்பேற்கும் அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் 222 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன.இதில்,ஆளும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பாஜக கைப்பற்றவுள்ளது.

இந்நிலையில்,கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க