May 15, 2018
தண்டோரா குழு
கர்நாடகத்தில் பாஜக முன்னிலை வகித்து வருவதால் அந்த மாநிலத்தின் முதல்வராகிறார் எடியூரப்பா.
கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ஆரம்பத்திலிருந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறப்பட்டது. ஆனால்,ஆளும் பாஜக கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றவுள்ளது.எனவே எடியூரப்பா கூறியது போல் அவர் முதல்வராகிறார்.
இந்நிலையில்,ஏற்கனவே கோவா, உ.பி,திரிபுரா, குஜராத் என 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.அந்த வகையில் தற்போது,பாஜக ஆட்சி செய்யும் 21-ஆவது மாநிலமாக கர்நாடகா விளங்கவுள்ளது.இதனால் பாஜக தொண்டர்கள் இந்த வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.