May 17, 2018
தண்டோரா குழு
கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்துள்ளார் கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா.
கர்நாடகாவில் சட்டபேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும்,மஜத 38 இடங்களை கைப்பற்றியது.இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பமான சூழல் இருந்தது.இதற்கிடையில்,காங்கிரஸ்– மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.அதைப்போல் பாஜகவும் உரிமை கோரியது.
இதனால் ஆளுநர் ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு விடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில்,பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவிற்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார்.இதையடுத்து,லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக இன்று காலை பதவி ஏற்றார்.
கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடியூரப்பா விவசாயிகளின் நலன் கருதி ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்.