November 7, 2018
தண்டோரா குழு
20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். அதைப்போல் ஆளும் கட்சி குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்தும் வருகிறார்.
இதற்கிடையில்,இன்று கமல்ஹாசனின் 64வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.இந்நிலையில்,ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,
“நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது;நான் மக்களின் கருவி.அரசியலில் சுகாதாரம் இருக்க வேண்டும்.ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது”. என கூறியுள்ளார்.