• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

November 21, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,திருச்சி,திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண்,தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது.12 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில்,கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒத்துக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.இந்நிலையில்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

1. உயிரிழப்பு,கால்நடை,உடைமைகளுக்காக ₹205.87 கோடி

2. வீடுகள் சேதம் – ₹100 கோடி

3. பயிர் சேதம் – ₹350 கோடி

4. சாலை,குடிநீர் உட்பட உள்கட்டமைப்பு – ₹102.5 கோடி

5. மீன்வளம் – ₹41.63 கோடி

6. மின்சாரம் – ₹200கோடி

மொத்தம்- ₹1000 கோடி என பிரிவு வாரியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க