புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வனவாசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“புயல் அடித்து முடிந்த உடனேயே பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இவ்வளவு விரைந்து செயல்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.தற்போது சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை.புயல் பாதிப்பு மாவட்டங்களுக்கு மேலும் 5 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.துணை முதலமைச்சரும் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும்,புயலால் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளது.மருத்துவ முகாம்கள்,நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயன்பெற்றிருகிறார்கள்.நான் நாளை நேரில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட உள்ளேன்”.இவ்வாறு பேசினார்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்