November 21, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,திருச்சி,திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து,திரையுலக பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் பங்கிற்கு நிதியுதவி அளிக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“வரும் டிசம்பர் 24ம் தேதி கனடாவில் உள்ள டொரோண்டோவில் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.