• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் பாதிப்பு: நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி

November 19, 2018 தண்டோரா குழு

கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சிவகுமார்,சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயலால் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர் சிவகுமார், சூர்யா,கார்த்தி,ஜோதிகா,2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க