• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘கஜா’ புயல் பாதிப்பு: சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம் நிதியுதவி

November 19, 2018 தண்டோரா குழு

கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.

புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும்,3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும்,30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர்,493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டு வர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தைபோல் நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ள அவர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

மேலும் படிக்க