கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்திரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும்,3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும்,30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர்,493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.சூர்யா,கார்த்தி,ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.அதைபோல் நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.இந்நிலையில்,கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை